SB Order 14/2021 : Transfer of Accounts belonging to discontinued schemes i.e. NSS-87 & NSS-92 in CBS Post Offices Source : http://util...
SB Order 14/2021 : Transfer of Accounts belonging to discontinued schemes i.e. NSS-87 & NSS-92 in CBS Post Offices
Source : http://utilities.cept.gov.in/dop/pdfbind.ashx?id=5670
SB order No 14/2021 - In Tamil
NSS87/NSS92 ஆகிய discontinued Scheme களை close செய்வதற்கு அந்த கணக்குகள் இருக்கின்ற HOவில் மட்டுமே (SO எனில் அதன் HO) close செய்ய வேண்டும் என SB order No 17/2017 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது நிலவுகின்ற மாபெரும் தொற்றின் காரணமாக டெபாசிட் தாரர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை களையும் வகையில் NSS87/ NSS92 வினை டெபாசிட் தாரர்கள் விரும்பும் HO களில் மட்டும் close செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன் படி டெபாசிட்தாரர் அருகில் உள்ள HO வில் டிரான்ஸ்பர் அப்ளிகேஷன் மற்றும் உரிய கட்டணம் இவற்றுடன் ID Proof, பான் கார்டு ,ஆதார் கார்டு Address Proof இவற்றை அளித்திட வேண்டும். HO SB சூப்பர்வைசர் KYC படிவத்தினை சரி பார்க்க வேண்டும். மேலும் Balance தொகை, Specimen signature சரிபார்த்து இவை சரியாக இருக்கும் பட்சத்தில் கணக்கினை ட்ரான்ஸ்பர் செய்திடும் வழிமுறையை துவக்க வேண்டும். கையெழுத்து, மற்றும் Balance tally ஆக வில்லை எனில் கணக்குகள் இருக்கும் தலைமை அஞ்சலகத்திற்கு டிரான்ஸ்பர் அப்ளிகேஷன் உடன் அனைத்து ஆவணங்களையும் பதிவு தபால் மூலம் அனுப்பி விடவேண்டும். நகல் ஒன்றினை தலைமை அஞ்சலகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த NSS82/NSS97 இருக்கும் HO supervisor அனைத்து ஆவணங்கள், டெபாசிட் டர் கையெழுத்து, கணக்கு பேலன்ஸ் உட்பட அனைத்தையும் verify செய்திட வேண்டும். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் டிரான்ஸ்பர் செய்யும் வழி முறையை துவக்க வேண்டும். இதற்காக அதிகபட்ச கால அவகாசம் ஏழு நாட்கள் வழங்கப்படும். கணக்கு டிரான்ஸ்பர் ஆன பிறகு டெபாசிட்டர் எந்த அலுவலகத்தில் close செய்ய விரும்பினாரோ அந்த அலுவலகத்தில் கணக்கினை Close செய்து SB credit/ cheque மூலமாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். பொதுவாக ஒரு கணக்கினை டிரான்ஸ்பர் மற்றும் clos செய்வதற்கு என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமோ அதனை முறையாக இங்கும் பின்பற்ற வேண்டும்.
COMMENTS